Asianet News TamilAsianet News Tamil

#BREAKING : இது உலக மகா நடிப்புடா சாமி.. தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக மாவட்ட செயலாளர் கைது.!

மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (48). இவர் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய கார் திடீரென தீப்பிடித்து எரிவதைக் கண்டு அக்கம்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து,  நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Thiruvallur west district bjp secretary car fire issue.. police Arrest
Author
Chennai, First Published Apr 16, 2022, 12:49 PM IST

சென்னை மதுரவாயலில் தனது காருக்கு தானே தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் எரித்துவிட்டதாக நாடகமாடிய பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். 

காருக்கு தீ வைப்பு

மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (48). இவர் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய கார் திடீரென தீப்பிடித்து எரிவதைக் கண்டு அக்கம்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து,  நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Thiruvallur west district bjp secretary car fire issue.. police Arrest

சிசிடிவி காட்சிகள்

இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் உடனடியாக மதுரவாயல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரு ஆண், ஒரு பெண் ஆகியோர் காரில் வந்து, சதீஷ்குமார் காருக்கு தீ வைத்தது தெரியவந்தது. 

Thiruvallur west district bjp secretary car fire issue.. police Arrest

பாஜக நிர்வாகி கைது

கட்சி ரீதியாக ஏதேனும் முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் சதீஷ்குமாரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் தனது காருக்கு தானே தீ வைத்தை  ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்;- தனது மனைவி காரை விற்று நகை வாங்கித்தரும்படி மனைவி அடிக்கடி தொல்லை கொடுத்ததால் மனஉளைச்சலில் இருந்ததால் காரை கொளுத்திவிட்டு மர்ம நபர்கள் கொளுத்திவிட்டதாக நாடகமாடியதாகவும் கூறினார். இதனையடுத்து, அவரை 2 பிரிவுகளின் கீழ் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும், வருங்காலங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபடக்கூடாது என பாஜக நிர்வாகியிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios