பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது. அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது.

அதுமுதல் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது . தினமும்  காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையான 74.86 ரூபாயாக இருக்கிறது. 

அதே போல ஒரு லிட்டர் டீசல் 69 .04 ரூபாயாக உள்ளது. இதுவும் நேற்றைய விலை தான். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.