குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு.. அரசு ஊழியர்களின் டவுட்டை கிளியர் செய்த தமிழக அரசு.!
கடந்த 2016-ம் ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு இந்த விடுமுறை கால அளவு ஒரு வருடமாக உயர்த்தப்பட்டது.
குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் சிறிது காலத்திலேயே இறந்துவிட்டாலும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு இந்த விடுமுறை கால அளவு ஒரு வருடமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தாய்மார்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்தது. அதில், குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.