Asianet News TamilAsianet News Tamil

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினா அரசு நடவடிக்கை எடுக்கும்.. ஒரே போடு போட்ட சென்னை உயர்நீதிமன்றம்.!

விநாயகர் சதுர்த்தியன்று தடையைமீறி ஊர்வலம் செய்ய முற்படுவோர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

The government will take action against the Ganesha Chaturthi...chennai high court
Author
Chennai, First Published Aug 19, 2020, 2:07 PM IST

விநாயகர் சதுர்த்தியன்று தடையைமீறி ஊர்வலம் செய்ய முற்படுவோர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர் அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இந்து முன்னணியினர் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்ளில் விநாயகர் சிலைகைள வைத்து வழிபாடுவோம் என்று தெரிவித்துள்ளதாகவும், அவற்றை தடுத்து நிறுத்துவதுடன் தடையை மீறி ஊர்வலமாக எடுத்து சென்றால் இந்து முன்னணியின் மூத்த தலைவர் ராமகோபாலன் மற்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பட்டிருந்தார்.

The government will take action against the Ganesha Chaturthi...chennai high court

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு ஏற்கனவே விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். அரசின் தடை உத்தரவை மீறுவோம் என இந்து முன்னணியினர் மிரட்டல் குறித்து மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு இதுபோன்ற மிரட்டல்களில் இருந்து அரசை பாதுகாப்பது நீதிமனறத்தின் வேலை இல்லை என்றும் உத்தரவை மீறப்பட்டால் அரசை கவனித்து கொள்ளும் என்று தெரிவித்தனர். 

The government will take action against the Ganesha Chaturthi...chennai high court

இதனிடையே, தடையை மீறி விநாயகர் சிலை வைக்கும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மற்றொரு மனு நீதிபதி சுந்தரேஸ், ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி உத்தரவை மேற்கொள்காட்டி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios