ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதி உள்ளது. அந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லும் என விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  

ஏற்கனவே தமிழ்நாட்டில் 80 ஆயிரம் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் நீட்டிப்புக் கோரி போராடி வருகின்றனர். இதனையடுத்து, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை நீட்டிப்பு செய்வது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.