தமிழக பாஜக தலைவராக இருந்த  தமிழிசைசௌந்திரராஜன் தெலங்கான மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில்  அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதிவியை ராஜினமா செய்ய திட்டமிட்டுள்ளார். கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜகவுக்கு தலைவராக இருந்து வருகிறார் தமிழிசை சௌந்திரராஜன், இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சொல்லின் செல்வர் என்று புகழப்படும் குமரியானந்தனின் மகள் ஆவர். பாரம்பரிய மிக்க காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தீவிர அரசியலில் சுழன்றுவந்தார் தமிழிசை. பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து படிப்படியாக உயர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவராக உயர்ந்தார். தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகளாக விளங்கிய  மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை எதிரிந்து அரசியல் செய்து தன் ஆளுமைத் திறமையை  நிருபித்தவர் தமிழிசை. 

தமிழக பாஜகவை தமிழிசைக்கு முன், தமிழிசைக்குப்பின், என்று பிரித்துப்பார்க்கும் அளவிற்கு தன் கடுமையான உழைப்பின் மூலம் தமிழகத்தில் பாஜகவிற்கென்று தனி இடத்தை உருவாக்கினார் தமிழிசை.  இவரின் வருகைக்கு முன்புவரை  தமிழக மக்களால் அன்னியமாகவே பார்க்கப்பட்டு வந்த பாஜகவை  தான் பொறுப்பேற்றதற்கு பின்னர் தமிழகத்தில் ஒரு அங்கமாக பாஜகவை மாற்றினார். கிளைகள்தோறும், மாவட்டந்தோறும், உறுப்பினர் சேர்க்கைகள் நடத்தி  தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தினார்.

மக்கள் நலன் சார்ந்த ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் அதிகம் நடத்தி  தமிழகத்தில் பாஜகவிற்கென்று தனி வாக்கு வங்கியை உருவாக்கினார் தமிழிசை. தன்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் உறுதியான கொள்கைப்பிடிப்பு, அனைத்து தரப்பு மக்களிடமும் இறங்கு பழகும்  எளிமை போன்ற காரணங்களால் அசைக்க முடியாத தலைவராக தமிழகத்தில் வலம் வந்த தமிழிசை, இன்று தெலங்கான மாநில ஆளுனராக உயர்ந்துள்ளார். மற்ற கட்சிகள் வியக்கும் வகையில் மாநிலம் முழுக்க உறுப்பினர் சேர்க்கை நடத்தி தமிழக பாஜகவுக்கு சுமார் 40 லட்சம் உறுப்பினர்களை இணைத்த  தமிழிசை தற்போது ஒரு மாநில ஆளுனராக உயர்ந்துள்ளதன் மூலம் தமிழக பாஜக அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.