தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் முக்கிய ஊர்களுக்கு பயணிகள் திரும்பிட சுமார் 6,789 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது, இந்நிலையில்   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள பயணிகள் பண்டிகை முடிந்து சென்னை திரும்பிட ஏதுவாக, அரசு போக்குவரத்துத்துறையின் சார்பில் இன்று  28-10-2019  வழக்கமாக  இயக்கப்படுகின்ற.  2,225 பேருந்துகளுடன்  சிறப்பு பேருந்துகள் சுமார் 1,600 பேருந்துகள் என மொத்தம் *3,825 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

 

மேலும், சென்னையை தவிர்த்து பிற முக்கிய பகுதிகளிலிருந்து முக்கிய ஊர்களுக்கு  2, 964 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆகமொத்தம் இன்றைய தினம்  6, 789 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன . மேலும், நாளைய தினத்தில் அதாவது 28-10-2019 முதல் 30-10-2019  வரையில் ஏறத்தாழ  9,998 பேருந்துகள் சென்னைக்கும்,  பிற  பகுதிகளில்  இருந்து முக்கிய ஊர்களுக்கு  செல்ல 6,689  பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த 24 தொடங்கி 26 ஆகிய மூன்று நாட்களில்  11,111 பேருந்துகள் இயக்கப்பட்டு, ஏறத்தாழ 6 லட்சத்து 70 ஆயிரத்து 630 பயணிகள் சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர்கள் சென்னைக்கு எந்தவித சிரமங்களும் இன்றி திரும்பிக்கொண்டிருக்கின்றனர். என போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.