Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu rain updates:அப்பாடா தப்பித்தது தமிழகம்.. அந்தமானுக்கு போன ஆபத்து.. வானிலை மையம் பகீர்..

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தற்பொழுது அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுப்பெற்று வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கரையை வரும் 4ஆம் தேதி காலை நெருங்க கூடும்.

Tamilnadu rain updats:Tamilnadu Just Miss .. Danger to the Andamans .. Weather Center update.
Author
Tamilnadu, First Published Dec 1, 2021, 3:00 PM IST

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்னு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-  01.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்றும் 02.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சொன்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், 03.12.2021, தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 04.12.2021, 05.12.2021: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்  பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஓரிரு இடங்களில் லேசானது மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

Tamilnadu rain updats:Tamilnadu Just Miss .. Danger to the Andamans .. Weather Center update.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) 9, சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) 7, திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்), வீரபாண்டி (தேனி மாவட்டம்), காட்பாடி (வேலூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர் மாவட்டம்) தலா 5,  சிவகாசி (விருதுநகர் மாவட்டம்), அம்முண்டி (வேலூர் மாவட்டம்), கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்), பவானி (ஈரோடு மாவட்டம்) தலா 4, சேரன்மகாதேவி (திருநெல்வேலி மாவட்டம்), சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்), உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சீபுரம் மாவட்டம்), பெரியகுளம் (தேனி மாவட்டம்), குன்னூர் (நீலகிரி மாவட்டம்), காவேரிப்பாக்கம் (மாவட்டம் ராணிப்பேட்டை), பொன்னை அணை (வேலூர் மாவட்டம்), அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்), எமரலாடு (நீலகிரி மாவட்டம்), செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) தலா 3.
     

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தற்பொழுது அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுப்பெற்று வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கரையை வரும் 4ஆம் தேதி காலை நெருங்க கூடும். இதன் காரணமாக 01.12.2021: அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

02.12.2021: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், 03.12.2021: மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Tamilnadu rain updats:Tamilnadu Just Miss .. Danger to the Andamans .. Weather Center update.

04.12.2021: வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 90  கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு  ஆந்திரா , ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்,  மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios