கொரோனாவில் இருந்து குணமடைந்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் 4 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஆனாலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு அரசியல் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருப்பவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். இவர் தான் சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் தீவிர களப்பணியாற்றி வந்தார். சென்னையில் கொரோனா அதிகம் பாதித்த பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு பணிகளை செய்தார். கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில், கடந்த ஜூலை 20ம் தேதி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினரான மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அரசு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் 4 பேரும் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.