தமிழகத்தில் மூன்றாம் கட்டமாக மே - 17 ஆம் தேதி வரை போடப்பட்டிருந்த, ஊரடங்கு உத்தரவு இன்று முடிவடைவதை ஒட்டி, நான்காம் கட்ட ஊரடங்கையும், சில கூடுதல் தளர்வுகளையும் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி, ஏற்கனவே தளர்வுகள் கொண்டுவரப்பட்ட வேலைகள் எவ்வித மாற்றமும் இன்றி செயல் படும் என்றும், புதியதாக சில கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார்.

அவற்றில் கொரோனா பாதிப்பு, குறைவாக உள்ள, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்யாகுமரி, தேனி , மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுகோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டுமே சில தளவுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இங்கு குறிப்பாக போக்குவதுகளுக்கு TN - E பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்குவதற்கு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் - தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுப்படி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களும், 50 நபர்களுக்கு அதிகமாக உள்ள தொழில்சாலைகளில் 50 சதவீத தொழிலாளர்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது, 100 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழில்சாலையில், 100 சதவீத பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழில்சாலைகளில்  50 சதவீத பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி  மட்டும் நடைபெற விலக்கழிக்கப்பட்டுள்ளது. 

அதே போல் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிப்படுகிறது . இதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்,   சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

போக்குவரத்து அனுமதிப்படாத, 12 மாவட்டங்களில் TN  e - pass உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தலாம் டாக்சி - ஆட்டோவுக்கு மட்டும் விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட பணிகளுக்கு வெளியில் செல்லும் போது... கட்டாயம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும், அவ்வபோது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தமாக வைத்து கொள்வதுடன், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.