Asianet News TamilAsianet News Tamil

தலைநகர் சென்னையை தலைதெறிக்க ஓடவிடும் கொரோனா.... ஜெட் வேகத்தில் உயர்ந்த பாதிப்பு..!

தமிழகத்தில் புதிதாக இன்று 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. 
 

tamilnadu covid 19 update...chennai reached 358 people affect
Author
Chennai, First Published Apr 21, 2020, 7:11 PM IST

தமிழகத்தில் புதிதாக இன்று 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் புதிதாக இன்று 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 457-லிருந்து 635-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் இதுவரை  178 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது என்றார்.

tamilnadu covid 19 update...chennai reached 358 people affect

இதில், 1000க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில், சென்னையில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tamilnadu covid 19 update...chennai reached 358 people affect

சென்னையில் 358 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 134 , திருப்பூரில் 109, திண்டுக்கல்லில் 76 , திருநெல்வேலியில் 62 , ஈரோட்டில் 70, திருச்சியில் 50, நாமக்கல் 50 மற்றும் ராணிப்பேட்டை 39, செங்கல்பட்டு 53, மதுரை 46,கரூர் 42, தேனி 43, மற்றும் திருவள்ளூரில் 48, தூத்துக்குடியில் 27 வேலூர் 22, விழுப்புரத்தில் 40 பேருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் , கடலூர் 26, மற்றும் சேலத்தில் 24, திருவாரூரில் 28, விருதுநகர் 19, திருவண்ணாமலை 12, தஞ்சாவூர் 46, நாகப்பட்டினம் 44, திருப்பத்தூர் 17, கன்னியாகுமரியில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 9 பேருக்கும், சிவகங்கை 12 மற்றும் வேலூரில் 19 , நீலகிரியில் 9, தென்காசி 31, கள்ளக்குறிச்சியில் 3 பேருக்கும் ராமநாதபுரத்தில் 11 பேருக்கும், அரியலூர் 4 மற்றும் பெரம்பலூரில் 5, புதுக்கோட்டையில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios