Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் ஒரே நாளில் 26 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு... உயிரிழப்பிலும் புதிய உச்சம்...!

கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Tamilnadu corona case  death and affected details
Author
Chennai, First Published May 7, 2021, 7:48 PM IST

கொரோனா நிலவரம் குறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையின் படி,  தமிழகத்தில் இன்று மட்டும் 1,52,812 மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 26,465 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த 20 பேரும் அடக்கம்.  இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 23ஆயிரத்து 965ஆக அதிகரித்துள்ளது. 

Tamilnadu corona case  death and affected details

கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 77 ஆயிரத்து 042 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 36 லட்சத்து 98 ஆயிரத்து 799 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால்  197 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 124 பேரும், தனியார் மருத்துவமனையில் 73 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Tamilnadu corona case  death and affected details

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் மட்டும் 22 ஆயிரத்து 381 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 11 லட்சத்து 73 ஆயிரத்து 439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 13 லட்சத்து 23 ஆயிரத்து 965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios