Asianet News TamilAsianet News Tamil

மகா சிவராத்திரியை முன்னிட்டு 25,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய பாஜகவின் வினோஜ் பி செல்வம்..

மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய கோயில்களில் பாஜக மாநில தேசிய செயலாளர் வினோஜ் பி செல்வம் அன்னதானம் வழங்கினார்.

Tamilnadu Bjp state secretary Vinoj P Selvam serves annathanam in chennai temples for Maha shivratri Rya
Author
First Published Mar 9, 2024, 10:19 AM IST

சிவபெருமானுக்கு அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி நாளை சிவராத்திரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. அப்படி மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாளை தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். இந்துக்களின் மிகவும் முக்கியமான விரத நாட்களில் ஒன்றான சிவராத்திரியை நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

ஈஷா மையத்தில் மஹா சிவராத்திரி விழா.. இளைஞர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது - குடியரசு துணைத் தலைவர் பாராட்டு!

அந்த வகையில் மகா சிவராத்திரியான நேற்று இந்தியா முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ள சிவாயலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் சென்னையில் உள்ள முக்கிய சிவாலயங்களில் பாஜக சார்பில் அன்னதானம் வழங்கினார். சுமார் 25,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

Tamilnadu Bjp state secretary Vinoj P Selvam serves annathanam in chennai temples for Maha shivratri Rya

சென்னையில் எந்தெந்த கோயில்கள் : கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ பரத்வாஜேஸ்வரர் திருக்கோயில், மன்னடியில் உள்ள ஸ்ரீ மல்லிகேஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், எழும்பூரில் உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரையில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொக்ண்டனர். பாஜக நிர்வாகிகளும் இதில் திரளாக கலந்து கொண்டனர். 

மகா சிவராத்திரி; திருச்சி காளி கோவிலில் அகோரிகள் நடத்திய சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Follow Us:
Download App:
  • android
  • ios