Asianet News TamilAsianet News Tamil

#BREAKING கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம்.. உயிரிழப்பு எண்ணிக்கை 98ஆக உயர்வு.. 17,000ஐ நெருக்கும் பாதிப்பு.!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 17,000ஐ நெருங்கியுள்ளது. அதேபோல், இதுவரை இல்லாத வகையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Tamilnadu 16,665 fresh cases; 4,764 reported in Chennai
Author
Chennai, First Published Apr 28, 2021, 6:39 PM IST

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 17,000ஐ நெருங்கியுள்ளது. அதேபோல், இதுவரை இல்லாத வகையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில்  16,665 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 16,632 , வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் அடங்குவர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,30,167ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 5வது நாளாக 4.764 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,23,452ஆக உயர்ந்துள்ளது. 

Tamilnadu 16,665 fresh cases; 4,764 reported in Chennai

இன்று மட்டும் 1,30,042 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,22,78,247 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 10,239 பேர் ஆண்கள் 6,426 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 6,82,519 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 4,47,610ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 38 ஆகவும் உள்ளது.

Tamilnadu 16,665 fresh cases; 4,764 reported in Chennai

இன்று மட்டும் 15,114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 10,06,033ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 98 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 51 பேரும், தனியார் மருத்துவமனையில்  47 பேரும் உயிரிழந்தனர். இதில், இணை நோய் இல்லாத 14 பேர் அடங்குவர்.  இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,826ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,10,308 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios