தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,27,688-ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் இன்று  6,972 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 6வது நாளாக பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதில், 6,908 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 64 பேர் அடங்குவர். இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,27,688ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 59,584 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 23,83,664 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

சென்னையில் இன்று 1,107 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96,438 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,233 பேர் ஆண்கள், 2,739 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,38,163 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 89,502 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. 

 தமிழகத்தில் இன்று கொரோனாவால் 88 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 3,659ஆக உயர்ந்துள்ளது. இதில், தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 65 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து இன்று 4,707 பேர் உட்பட இதுவரை 1,66,956 பேர் குணமடைந்துள்ளனர். இன்று செங்கல்பட்டில்365, திருவள்ளூர் 486, தூத்துக்குடி 381, விருதுநகர் 577, திருவண்ணாமலை 268, தேனி 283 ஆகிய பகுதிகளில் பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது.