ஆசியாவில் முதல் முறை.. சென்னையில் சர்வதேச ஆய்வு மையம்... பைசர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!
பைசர் நிறுவனம் உலகம் முழுக்க விற்பனை செய்து வரும் அனைத்து வகையான மருந்து பொருட்களும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமான பைசர், சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. ரிசர்ச் பார்க்கில் மருந்து ஆராய்ச்சி மையத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த மையத்தை உருவாக்க 150 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஐ.ஐ.டி. மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கில் 61 ஆயிரம் அடி சதுர இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆய்வு மையத்தில் 250 தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியாற்ற உள்ளனர். இங்கு புதிய மூலக்கூறு,சூத்திரங்கள் மற்றும் மருந்து பொருட்களை உருவாக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது. இங்கு பைசர் நிறுவனம் உலகம் முழுக்க விற்பனை செய்து வரும் அனைத்து வகையான மருந்து பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
12 ஆய்வு மையங்கள்:
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அமையும் புது ஆய்வு மையத்தை சேர்த்து உலகம் முழுக்க பைசர் நிறுவனத்திற்கு 12 ஆய்வு மையங்கள் உள்ளன. எனினும், ஆசியாவில் உருவாகும் பைசர் நிறுவனத்தின் முதல் ஆய்வு மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில் ரிசர்ச் பார்க்கில் அமையும் பைசர் ஆய்வு மையம் சென்னையில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக அமைக்கப்படும் அதிநவீன ஆய்வகங்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கும் என பைசர் இந்தியா மேலாளர் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் இந்த பணிகளை மேற்கொள்வதற்கான சோர்ஸ் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏராளமாக உள்ளன. சென்னை மட்டும் இன்றி கோவா, ஆமதாபாத் மற்றும் விசாகபட்டினம் போன்ற பகுதிகளிலும் பைசர் உற்பத்தி ஆலைகள் ஏற்கனவே துவங்கி தற்போது செயல்பட்டு வருகின்றன.
சிறப்பான இடம்:
“அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையை சார்ந்து இயங்கும் உலகத் தரம் மிக்க ரிசர்ச் பார்க் வளாகம் எங்களது பணிகளுக்கு மிகவும் சிறப்பாக அமைந்து உள்ளது. ஐ.ஐ.டி. மெட்ராஸ் மற்றும் இதர தொழில்நுட்ப ரிசர்ச் பார்க் ஸ்டார்ட்-அப்களுக்கு நெருக்காமக் இருப்பது கல்வித் துறை சார்ந்த கூட்டணிகளை பலப்படுத்தி, புதுமைகளை படைக்க மேலும் தூண்டுகோலாக இருக்கும். இந்த ஒருங்கிணைந்த மையத்தில் பைசர் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால பொருட்கள் இங்கு உருவாக்கப்படும்” என ஸ்ரீதர் மேலும் தெரிவித்தார்.