தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  முதல் முறையாக 2000 கடந்துள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிப்ப எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக பாதிப்பு 2000 கடந்துள்ளது. இன்றும் மட்டும் 2,174 பேர் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,193ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் கடந்த 14 நாட்களாக பாதிப்பு ஆயிரத்தை எட்டி வந்த நிலையில் நேற்று மட்டும் ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. இந்நிலையில், மீண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு 1,276 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து,  மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 35,521ஆக அதிகரித்துள்ளது. 

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 842 அடுத்து மொத்தம் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27,624ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 49 உயிரிழந்ததையடுத்து மொத்தம் பலி எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 35 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் செங்கல்பட்டு 162, திருவள்ளூர் 90, ராணிப்பேட்டை68, கடலூர் 63, காஞ்சிபுரம் 61, ராமநாதபுரம் 50, திருவண்ணாமலை 47, தூத்துக்குடி 43 உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல், சிங்கப்பூர், சவுதி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த 16 பேருக்கும், மகாராஷ்டிரா, கர்நாடக உட்பட வெளிமாநிலங்களில் இருந்து வந்த 64 பாதிப்பு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும், தமிழகத்தில் முதன்முறையாக 24 மணிநேரத்தில் 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று உள்ளதா என இதுவரை 7,73,707 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.