தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஓய்வு.. பிரமிக்க வைக்கும் கடந்து வந்த பாதை.. இப்படியோரு போலீசா?
கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர் டிஜிபியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்தின் முதல் காவல் ஆணையர் என்ற பெருமை பெற்ற டி.ஜி.பி.ரவி, நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்தின் முதல் காவல் ஆணையர் என்ற பெருமை பெற்ற டி.ஜி.பி.ரவி, நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்ட ரவி திமுக ஆட்சியமைத்த பிறகு கடந்த 2021ம் அக்டோபர் மாதம் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ரவி நியமிக்கப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர் டிஜிபியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்தின் முதல் காவல் ஆணையர் என்ற பெருமை பெற்ற டி.ஜி.பி.ரவி, நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சிறப்பான வழி அனுப்பு விழா, நேற்று மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
கடந்து வந்த பாதை
* தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஏ.எஸ்.பி-யாக பணியைத் தொடங்கிய ரவி, அதன் பிறகு ஓசூரில் ஏ.எஸ்.பி-யாகப் பணியாற்றினார். அப்போது, அங்கு நடைபெற்ற குற்றச்செயல்கள் பலவற்றை தடுத்து நிறுத்தி பலரின் பாராட்டைப்பெற்றார்.
* 1994ம் ஆண்டு எஸ்.பி-யாகப் பதவி உயர்வுபெற்று ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றிய போது பரபரப்பு நிறைந்த தங்கம் முத்துகிருஷ்ணன் கொலை வழக்கு குற்றவாளிகளை திறம்பட விசாரித்து கண்டறிந்ததோடு, பெரும் ஜாதிக் கலவரத்தை தடுத்து நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு.
* விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய போது சாதிக் கலவரத்தைத்தூண்டும் வகையில், திண்டிவனத்தில் நடந்த அம்பேத்கர் சிலை சிதைப்பு செயலை திறம்பட கையாண்டு, சிலையைச் சுற்றி பூந்தோட்டம் அமைத்து, பொது அமைதியை நிலை நாட்டினார்.
* 10 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில் அட்டகாசம் செய்து வந்த ரவுடியை உளவுப் பிரிவு மூலம் கைது செய்த பெருமையும் இவருக்கு உண்டு.
* விழுப்புரத்தில் எஸ்.பி-யாகப் பணியாற்றியபோது ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸில் 40,000-க்கும் மேற்பட்டவர்களைச் சேர்த்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
* திண்டுக்கல், சேலத்தில் டி.ஐ.ஜி.யாகவும் பின் சென்னையில் சட்டம், ஒழுங்கு இணைஆணையராகவும், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
* சென்னையில் இணை ஆணையராக ரவி பணியாற்றியபோது ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் வங்கிகளில் கடனுதவிக்கும் ஏற்பாடு செய்தார்.
* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவில் ஏ.டி.ஜி.பி.,யாக ரவி இருந்தபோது சிறார்வதை ஆபாசப் படங்கள், வீடியோக்களைப் பார்த்தவர்கள், பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.
* பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இவர் கொண்டு வந்த "காவலன் SOS ஆப்" குறுகிய காலத்தில் தமிழக மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது.
* மேட்ரிமோனி மோசடி மூலம் 200 இளம்பெண்கள் மற்றும் பெண்களை ஏமாற்றிய லியாகத் அலி கான் என்ற குற்றவாளியை கைது செய்தார்.
* சென்னை காவல் துறையின் 150ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு "காவலர் நமது சேவகர்" என்ற தலைப்பில் குறும்படத்தை எழுதி, தயாரித்து நடிக்கவும் செய்தார்.
* 2008ஆம் ஆண்டு டேராடூனில் நடைபெற்ற அனைத்து இந்திய காவலர் பேட்மிண்டன் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறைக்கு தலைமை வகித்து, ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை பெற்றுக் கொடுத்து இருக்கிறார்.
* இவரின் சிறந்த பணிக்குச் சான்றாக 2007ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம், 2016ஆம் ஆண்டு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.