Tamilnadu Rain : 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழையாம்.! சென்னையை குளுகுளுவாக்கிய கோடை மழை..

கத்தரி வெயில் வாட்டி வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Summer rains in various parts of Chennai

கத்தரி வெயில் வாட்டி வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது.  இந்தப் புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய அசானி என பெயரிடப்பட்டுள்ளது. அசானி என்றால் சிங்கள மொழியில் பெருஞ்சினம் என அர்த்தமாகும்.

Summer rains in various parts of Chennai

அசானி புயலால் தமிழகத்திலும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Summer rains in various parts of Chennai

இந்நிலையில்,  சென்னையில் அதிகாலை முதல் கோடம்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், அடையாறு, வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதேபோல், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ஈரோடு, கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு பகுதியில் நேற்றிரவு வீசிய பலத்த காற்றால் மாமண்டூர் பாலாற்று பகுதியில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Summer rains in various parts of Chennai

இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, வேலூர், நாமக்கல் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் கடுமையில் சிக்கித் தவித்த மக்கள் தற்போது  பெய்து வரும் மழையால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios