சமூக வலைதளத்தில் தன்னைப்பற்றி ஆபாசமாக  பேசிவருவதுடன், தன்னை விபச்சாரியாக சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளவர்களின்  மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராசிரியையும் சமூக செயற்பாட்டாளருமான சுந்திரவல்லி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு:-

வணக்கம் நான் சந்தரவல்லி... கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக தளத்தில் பெண்விடுதலை தொடர்பாகவும்,  சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பேராசிரியராக கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் (பேஸ்புக், வாட்ஸ் ஆப்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி மிக இழிவான வார்த்தைகளில் , அதாவது வேசி, விபச்சாரி போன்ற சொற்களைக் கொண்டு வசைபாடுவதுடன், ஆபாச படங்களில் என்னுடைய முகத்தை ஒட்டி வன்ம பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டுக் வருகின்றனர்,

 

குறிப்பாக சதீஷ்குமார், ஜெயபிரகாஷ், தமிழ் இந்து சரவணன் துரைசாமி மற்றும் ஆனந்த முருகன், உள்ளிட்டோர் ஆபாச வார்த்தைகளில் பதிவிட்டு என்னை கேலி செய்துள்ளனர். வசந்த் மற்றும் மணிகண்டன் போன்றோர் வாட்ஸ் ஆப் குழு ஆரம்பித்து அதில் கடுமையாக என்னை விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே 17- 9 -2019 அன்று அபிமன்யு, சரவணன் துரைசாமி, ஆனந்த முருகன், ஆகியோர் தனது முகநூல் பக்கங்களில் என்னை விபசார வழக்கில் கைது செய்ததாகவும், அந்த செய்தி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதைபோலவும், இவர்களாகவே போலியான வீடியோ தயாரித்து அதை  சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். இது எனது பொது வாழ்க்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு சுந்தரவல்லி  இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.