பாறையை உடைத்து குழந்தையை தூக்குவதற்கு நேரம் ஆகிவிடும் என்பதால், மீண்டும் பழைய முறையிலேயே குழந்தையை மீடக் திட்டமிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதற்காக சிறுவன் விழுந்த குழி வழியாகவே பிரத்யேக (குடை விரிந்து சுறுங்குவது போன்ற) கருவியை இறக்கி மீட்க நடவடிக்கைகள்  எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.  மணப்பாறை நடுக்காட்டு பட்டியில் இரண்டு வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து  70 மணி நேரங்கள் ஆகிவிட்டன. ஆனால் மண்ணைத் தோண்டு.! பாறையை உடை.! என நேரம் தள்ளிக்கொண்டே போவதால் சிறுவனுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால்  மீண்டும் பழைய முறையையே கையாண்டு குழந்தையைமீட்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் வீரமணி குழுவினரை  களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.  தொடக்கத்தில் குழந்தை 26 அடியில் இருந்தபோது கொத்தமங்கலம் வீரமணி குழுவினர் சிறுவனை தூக்க முயற்சி செய்தனர்,  ஆனால் திடீரென சிறுவன் 20 அடிக்கு கீழே சரிந்து 70 அடியில் மண் மூடியதால் மண்ணை அகற்ற கால அவகாசம் இல்லாமல் முயற்சி பலனளிக்கவில்லை, அவரது கருவியும் பலன் கொடுக்கவில்லை,  இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக சிறுவன் விழுந்த குழிக்கு அருகில் ஆள் இறங்கும் வகையில் குழி தோண்டும் பணியை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இடையில் பாறையால் பணி தடைபட்டுள்ளது. இந்நிலையில் கொத்தமங்கலம் வீரமணி குழுவினர் வைத்துள்ள கருவி அவர்கள் எடுக்கும் முயற்சியும் பலன் அளிக்கும் என்பதை அறிந்து கொண்ட அதிகாரிகள் இன்று மதியம் திடீரென வீரமணிக்கு ஃபோன் செய்து குழந்தையின் மீட்கவருமாறு அழைத்துள்ளனர். 

இதனையடுத்து கொத்தமங்கலத்தில் இருந்து வீரமணி மற்றும் அவரது குழு சகாக்கள் சதாசிவம், அருள், ராஜசிங்கம் , விஜய் , ஆனந்த் , அலெக்ஸ் , தங்கராசு , ராஜேந்திரன் . ஆகியோர் நடுக்காட்டு பள்ளிக்கு விரைந்து வந்து கொண்டிருக்கின்றனர்.  அதற்கு முன்பாக இது குறித்து தெரிவித்துள்ள வீரமணி,  எங்கள் பார்முலாவை பயன்படுத்தி குழந்தையை மீட்கலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது . குழந்தை சிக்கி இருக்குமிடத்தில் ஒரு அங்குலம் அளவிற்கு ஒரு சந்து இருந்தால் போதும் அந்த சந்து வழியாக குழந்தைக்கு கீழே எங்கள் கருவியை இறக்கி அப்படியே குழந்தையை அலேக்காக மேலேதூக்கி வந்து விடுவோம்.  என்று அடித்து சொல்கிறார் அவர். இந்த முயற்சி நிச்சயம் வெற்றி அளிக்கும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்