ஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் ஸ்விக்கி நிறுவனம் தனது நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக  தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சம்யுக்தா விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக சம்யுக்தா விஜயன் பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த பொள்ளாச்சியில் பிறந்த சம்யுக்தா விஜயன், 10 ஆண்டுகள் அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னர் ஆடை வடிவமைப்பில் ஈடுபாடு கொண்ட இவர் ஐரோப்பா, அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கு பேஷன் டிசைனராக இருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், தனியாக ஒரு ஆன்லைன் பேஷன் இணையத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது இவர் ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.