சென்னை SRM பல்கலைக்கழகத்தில், இன்று அறிவியல் மற்றும் தொழிநுட்ப துறையை தேர்வு செய்து, படித்த மாணவ - மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா, மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

மொத்தம் 5884 மாணவ - மாணவிகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், SRM  குழுமத்தின் தலைவருமான பாரி வேந்தர், மங்களகிரி AIMS  மருத்துவமனையின் தலைவர்  T.S.ரவிக்குமார், மற்றும் AICTE யின் முன்னாள் தலைவர் தாமோதர ஆச்சரியா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களின் உரைக்கு பின்னர், மாணவ - மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 3091 மாணவ - மாணவிகள் இளங்கலை பட்டமும், 1576 மாணவ மாணவிகள் முதுகலை பட்டமும் 69 மாணவ - மாணவிகள் phd பட்டமும் பெற்றனர். மேலும் 338 மாணவ மாணவிகள் diplamo பட்டம் பெற்றனர்.

இங்கு பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் மருத்துவம் ,வணிகம் ,வேளாண்மை போன்ற துறை சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.