Asianet News TamilAsianet News Tamil

"சென்னையை மூன்றாக பிரிச்சு விடுங்க " - முன்னாள் துணை மேயரின் அதிரடி கோரிக்கை

சென்னை மாநகராட்சியை நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்க வேண்டும் என்று முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் வேண்டுகோள்  விடுத்துள்ளார் .
 

split chennai corporation into three parts
Author
Tamil Nadu, First Published Aug 21, 2019, 10:55 AM IST

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு நேற்று 75 வது பிறந்தநாள்  . இதற்காக சைதாப்பேட்டை சின்னமலையில் இருக்கும் அவரது சிலைக்கு முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்.

split chennai corporation into three parts

பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர் கூறியதாவது :

16 சட்டமன்ற தொகுதிகளும் 155 வார்டுகளும் இருந்த சென்னை மாநகராட்சி மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக  இருந்த போது திருத்தி அமைக்கப்பட்டு 22 சட்டமன்ற தொகுதிகளும் , 200 வார்டுகளுமாக மாற்றப்பட்டது . அப்போது மேயராக மா . சுப்ரமணியன் இருந்தார் .

அந்த நேரத்தில் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் என்னிடம் , "நான் மத்திய உள்துறை மந்திரியாக இருந்த காலக்கட்டத்தில் டெல்லி மாநகராட்சியை மூன்றாக பிரித்து நிர்வாகத்தை சீரமைத்து கொடுத்தேன். அதேபோல, சென்னை மாநகராட்சியையும் மூன்றாக பிரித்து நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்” என்றார்.

split chennai corporation into three parts

அவரின் யோசனையை மு.க. ஸ்டாலினிடம் கொண்டு சென்றேன் . அதன்படி, இப்போது ராஜீவ்காந்தியின் பிறந்த நாளில் பெருநகர சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறினார் .

Follow Us:
Download App:
  • android
  • ios