புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களுக்கு தமிழக அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த செங்கல்பட்டு, திருநெல்வேலியில் இருந்த தென்காசி ஆகிய பகுதிகளை பிரித்து, 2 புதிய மாவட்டங்களை, கடந்த 18ம் தேதி சட்டபேரவையில் முதல்வர் அறிவித்தார். மேலும் இங்கு ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதைதொடர்ந்து தமிழக அரசு செங்கல்பட்டு, தென்காசி ஆகிய புதிய மாவட்டங்களுக்கு 2 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சர்க்கரை கழகத்தின் கூடுதல் இயக்குனராக பணியாற்றிய ஜி.கே.ருண் சுந்தர் தயாளன் சிறப்பு அதிகாரியாகவும். தென்காசி மாவட்டத்துக்கு தமிழநாடு கடல்சார் ஆணையத்தின் தலைவராக இருந்த ஏ.ஜான் லூயிஸ் சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.