கிளாம்பாக்கத்தில் விரைவில் புதிய ரயில் நிலையம்! டெண்டர் கோரும் தெற்கு ரெயில்வே!

கிளம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஓர் ஆண்டுக்குள் முடிக்க இருப்பதாகவும் தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

Southern Railway has called for a tender to build a new railway station in Kilambakkam sgb

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கு தெற்கு ரெயில்வே டெண்டர் கோரி இருக்கிறது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டத்தைக் குறைக்கவும் போகுகவரத்து நெரிசலைச் சமாளிக்கவும் தாம்பரத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தொலைதூரப் பேருந்துகளை இங்கிருத்து இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்ககம் பேருந்து நிலையத்திற்கு எதிரே தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரயில்வே துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை ஏற்ற தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரூ.20 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் கட்டுவதற்கான டெண்டர் கோரி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அமைய உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையம் புறநகர் ரயில்கள் நின்றுசெல்ல வசதியாக மூன்று நடைமேடைகள் கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கிளம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஓர் ஆண்டுக்குள் முடிக்க இருப்பதாகவும் தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது. இந்த ரயில் நிலையம் திறக்கப்பட்ட பின்பு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பாக்கம் வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதனால், விடுமுறை காலங்களில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கிளம்பாக்கம் வரை ரயிலில் சென்று பின் அங்கிருந்து பேருந்துகளில் ஊருக்குச் செல்ல முடியும். இதன் மூலம் விடுமுறை நாட்களுக்கு முன்பும் பின்பும் சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தலாம் என்று அரசு கருதுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios