சமூக ஆர்வலர் முகிலன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை வரும்  புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.  பாலியல் குற்றச்சாட்டில் புகார் கூறிய ராஜேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் (53). இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ல் பேட்டியளித்தவர் திடீரென மாயமானார். இவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக  சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், திருப்பதி ரயில் நிலையத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின்னர்  முகிலன் கைதுசெய்யப்பட்டார்.  தற்போது  திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில்  முகிலன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்  செய்திருந்தார். 


இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்  விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜாரகி வாதிட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டனர். அதே போல் பாலியல் குற்றுச்சாட்டு புகார் கொடுத்த குளித்தலை ராஜேஸ்வரி தரப்பில் இருந்து முகிலனுக்கு ஜாமின் கொடுக்கக்கூடாது  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் புதன்கிழமை 13-11-2019 க்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.