கே.கே.நகரில் ஷூவை சுத்தம் செய்த போது அதிலிருந்த பாம்பு கடித்ததில் இளம்பெண் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை கே.கே.நகர் கன்னிகாபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் பழனி(39). இவரது மனைவி சுமித்ரா(35). கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னை முழுவதும் கன மழை செய்து வருகிறது. இதனால் வீடு முழுவதும் சகதியாக இருந்ததால் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு சுமித்ரா சுத்தம் செய்துள்ளார். வீட்டின் கழிவறை அருகே இருந்த ஷூவை எடுத்து வைக்கும்போது, அதில் இருந்த கொடிய வீசம் கொண்ட பாம்பு ஒன்று சுமித்ராவை கடித்தது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு அவரது கணவர் பழனி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சுமித்ராவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், உடல் முழுவதும் விஷம் பரவியதால் மேல்சிகிச்சைக்காக உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சுமித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.