பிளாட்பாரத்தில் பொறிபறந்த பட்டாக்கத்தி.. ரயில் பயணிகளை அலற விட்ட மாணவர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.!
சென்னை சென்ட்ரலில் இருந்து கடந்த 7ம் தேதி மாலை கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். இதில் சில மாணவர்கள் கத்திவாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரயில் நிலைய நடைமேடைகளில் பட்டா கத்திகளை உரசி, தீப்பொறி ஏற்படுத்தினர்.
ரயில் நிலைய நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி ரகளையில் ஈடுபட்ட விவகாரத்தில் மாநில கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கடந்த 7ம் தேதி மாலை கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். இதில் சில மாணவர்கள் கத்திவாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரயில் நிலைய நடைமேடைகளில் பட்டா கத்திகளை உரசி, தீப்பொறி ஏற்படுத்தினர். இதனை கண்டு ரயிலில் இருந்த பயணிகளும், நடைமேடையில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க;- போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.! கடை பகுதியில் நின்ற இளைஞர்களை வெட்டிய ரவுடிகள் -சென்னையில் பயங்கரம்
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வீடியோ பதிவுகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பொன்னேரி கீரப்பாக்கத்தை சேர்ந்த அருள் (18), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அன்பரசு, ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
இதில், அன்பரசு, ரவிச்சந்திரன் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் மாநில கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அருளை சிறையிலும், மற்ற 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.
இதையும் படிங்க;- குட்நியூஸ்.. இனி சென்னை புறநகர் ரயில்களிலும் குளுகுளுனு பயணிக்கலாம்.. விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்..!