போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.! கடை பகுதியில் நின்ற இளைஞர்களை வெட்டிய ரவுடிகள் -சென்னையில் பயங்கரம்
சென்னை, ஆலந்தூரில் 20 பேர் கொண்ட ரவுடிகும்பல் பெட்ரோல் குண்டு வீசியும், அந்த பகுதியில் நின்றிருந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டியும் உள்ளனர். பொதுமக்கள் அலறி அடித்து ஓடிய நிலையில் மர்ம கும்பலை பிடிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் ரவுடிகள் அட்டகாசம்
தமிழகத்தில் ஆப்ரேஷன் மின்னல் என்கிற பெயரில் போலீசார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த நிலையில் நேற்று தமிழகத்தின் தலை நகரான சென்னையில் 20 பேர் கொண்ட ரவுடி கும்பல் பொதுமக்களை தாக்கியும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் அராஜகத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் நேற்று இரவு 9 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் கையில் பெட்ரோல் வெடிகுண்டு, கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தெருவில் நின்று கொண்டிருந்தவர்களை மிரட்டி உள்ளனர். பின்னர் அந்த தெருவில் கடைசியில் சித்தர் கோயில் சுற்றி புதர்மண்டி காலி இடம் உள்ளது, அங்கு பெட்ரோல் வெடிகுண்டு வீசி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். . அப்போது இந்த கும்பல் நாங்கள் தான் இங்கு பெரிய ரவுடி என கத்திக் கொண்டே கையில் இருந்த கத்தியால் அந்த தெருவில் நின்று கொண்டுந்த நவீன்(31), ஷபீக்(22), அபுபக்கர்(19), ஆகிய மூன்று பேரை தலையில் வெட்டியுள்ளனர்.
மத அடிப்படையில் அமைதியை சீர்குலைக்கும் பிரிவினைவாதிகள்..! ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- கூட்டறிக்கை
இளைஞர்கள் மீது அரிவாள் வெட்டு
இதனால் பயந்து போன அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது ரவுடிகள் போலீசார் நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மேலும் தெருவோரம் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, பிளாஸ்டிக் சேர் ஆகியவற்றை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பதற்றமான சூழ்நிலை நிலவியதால் பரங்கிமலை துணை ஆணையர், அடையார் துணை ஆணையர், மடிப்பாக்கம் உதவி ஆணையர், உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர். தலையில் வெட்டுக்காயமடைந்த இளைஞர் மூவரையும் கிண்டி கத்திபாரா அருகில் உள்ள தனியார் மருத்துவமமையில் சிகிச்சைக்காக அனுமத்தித்தனர். இதில் நவீன் மற்றும் அபுபக்கர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஷபீக் மட்டும் மேல் சிகிச்சைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கொலைக்கு பழிக்கு பழி
தப்பியோடிய நபர்கள் யார் என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் எதற்காக வந்தார்கள் எனவும் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு ரவுடி நாகூர் மீரான் கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு பழிதீர்க்கும் விதமாக மற்றொரு ரவுடியான ராபின் என்பவரை கொலை செய்ய இந்த ரவுடி கும்பல் சுற்றித்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்ட ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்