சென்னை கிண்டியில் பிரபல ஹோட்டல் பாத்ரூமில் ரகசிய வீடியோ.. திமுக பெண் பிரமுகர் அலறல்.. போலீசில் புகார்..!
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த திமுக மகளிரணி அமைப்பாளரான பாரதி. இவர் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேர்காணலுக்கு வந்த போது, கிண்டி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள சங்கீதா உணவகத்தில் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது உணவகத்தில் உள்ள பாத்ரூமுக்கு சென்ற போது சுவற்றில் அட்டைப் பெட்டி ஒன்று இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார்.
சென்னை கிண்டியில் உள்ள சங்கீதா உணவகத்தில் பாத்ரூமில் செல்போன்வைத்து பெண்களை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடை ஊழியரைக் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த திமுக மகளிரணி அமைப்பாளரான பாரதி. இவர் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேர்காணலுக்கு வந்த போது, கிண்டி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள சங்கீதா உணவகத்தில் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது உணவகத்தில் உள்ள பாத்ரூமுக்கு சென்ற போது சுவற்றில் அட்டைப் பெட்டி ஒன்று இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார்.
அதை எடுத்துப் பார்க்கும் போது செல்போன் கேமரா வீடியோ பதிவாகி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுதொடர்பாக நிர்வாகத்திடம் முறையிடப்பட்டது. பின்னர், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, உணவக ஊழியர் கண்ணன்(எ) தவக்கண்ணன் என்பவர், தனது செல்போனை பாத்ரூமில் வைத்து பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. உணவக ஊழியர் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல உணவகத்தில் பாத்ரூமில் ரகசிய வீடியோ பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.