தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு கட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி தற்போது குறைய தொடங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் எப்போதும் பள்ளிகள் திறக்கலாம் என்பது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் மத்தியில் ஒரு ஆலோசனை நடைபெற்றது. இந்த சூழலில் நவம்பர் மாதத்தில் பள்ளிகளை திறக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில்;-  தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. மேலும், வரக்கூடிய கல்வியாண்டின் காலம் மிகக்குறைவாக இருப்பதால் மார்ச் மாதத்தில் நடத்தக்கூடிய 10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதேபோல், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் வரக்கூடிய கல்வியாண்டில் இருக்காது என கூறப்பட்டுள்ளது.