Chennai Heavy Rain : சென்னையில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்.!
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் கத்திரி வெயில் நிறைவடைந்த பிறகும் கடந்த 20 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெயிலின் தாக்கம் 2 நாட்களாக குறைந்த போதிலும் புழுக்கம் காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், தென்மேற்கு வங்க கடல் அதனை ஓட்டிய மத்திய வங்ககடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் கோயம்பேடு, பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், பெரியமேடு, வேப்பேரி, கிண்டி, மயிலாப்பூர், சாந்தோம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.
இதையும் படிங்க;- சென்னையில் மீண்டும் விடிய விடிய மழை பெய்ய வாய்ப்பு! அலர்ட் செய்யும் வானிலை அறிவிப்பாளர்கள்!
அதேபோல், புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- விடாமல் அடித்து நொறுக்கிய கனமழை.. தத்தளித்த கத்திப்பாரா சுரங்கப்பாதை.. தற்போதைய நிலை என்ன?
அதேபோல், நேற்று இரவு முதல் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று பள்ளி மாணவர்கள் உற்சாகத்தில் இருந்து வந்தன. ஆனால், சென்னையில் நேற்று இரவு அதிக அளவில் மழை இல்லை என்பதால் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.