பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி அவர்களிடம் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் டியூஷன் ஆசிரியை தனது  காதலனுக்காக தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவிகளை விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,  அதில் இருந்து மீள்வதற்குள், மேலும் ஒருசம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது.  பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டுள்ள சம்பவம்தான் அது. 

மாதா,  பிதா,  குரு,  தெய்வம்,  என்று சொல்வதற்கு ஏற்ப பெற்றோர்களை விட ஆசிரியர்களே,  பிள்ளைகளை நன்கு கவனித்துக் கொள்வார்கள் என்று பெற்றோர்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையுடனும்,  நம்பிக்கையுடனும் பிள்ளைகளை அனுப்பி வைக்கும் ஒரே இடம் எதுவென்றால் அது பள்ளிக்கூடங்கள்தான். அதற்கு காரணம் ஆசிரியர்கள் தெய்வத்திற்கு நிகராக பார்க்கப்படுவது ஆசிரியர்களைத்தான்.  ஆனால்  அந்த நம்பிக்கை அனைத்தையும் உடைத்து தவிடு பொடியாக்கும் வகைகள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஒரு மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசிய மாணவிகளை திசை திருப்பம் முயற்சித்துள்ளார்.   அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவிகளிடம் அந்த ஆசிரியர் நிர்வாண புகைப்படங்களை காட்டி ஆபாசமாக பேசியுள்ளார்.  அத்துடன் சாதி பெயர்களை சொல்லி,  மாணவிகளை திட்டியதுடன்.  விடுமுறைகளை எடுத்தாள்,  நீ எவனுடன் எங்கே போனாய்  என்று கேட்பதாகவும்  வாடி, போடி, என மாணவிகளை ஒருமையில் பேசுவதாகவும் ஆசிரியர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். 

 இதுகுறித்து வட்டார கல்வி அலுவலரிடம் மாணவிகள் புகார் அளித்ததை அடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்.  ஆசிரியரை அழைத்து விசாரித்துள்ளனர்.  ஆனால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக,  அவரை விடுவிப்பதற்கான சமாதான முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தற்போது புகார் எழுந்துள்ளது.  மாணவிகளை இதுபோன்ற சமூக விரோத செயல்களில் இருந்து பாதுகாக்க குறிப்பிட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.  இதனால் அந்த ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட பள்ளிக் கல்வி அலுவலர் உதயகுமார்  உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.