மேல ஏறி வரசொன்ன நடத்துநரை பாட்டிலை உடைத்து மிரட்டிய பள்ளி மாணவர்கள் - நடத்துநர் குமுறல்
சென்னையில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர்களை நடத்துநர் கண்டித்த நிலையில், அந்த மாணவர்கள் நடத்துநரிடம் மதுபாட்டிலை உடைத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடசென்னை ஐஓசி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் வரை செல்லக்கூடிய மாநகராட்சி பேருந்து 44சி. இதில் நடத்துநராக பணிபுரிந்து வருபவர் சிவசங்கர். வழக்கம் போல் நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து ஐஓசி நோக்கி பேருந்தை இயக்கி வந்துள்ளனர்.
அப்போது தண்டையார்பேட்டை நெருங்கும் வழியில் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தின் ஜன்னல் கம்பிகளை இழுத்தவாறு வந்ததாகவும் அதை நடத்துநர் சிவசங்கர் கேட்டபோது கீழே இறங்கி பாட்டில்களையும், கத்தியையும் மாணவர்கள் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் போடியில் இருந்து இயக்கப்பட்ட ரயில் சேவை
இதனால் தன்னை போன்ற மாநகர பேருந்து ஊழியர்கள் மனவிரக்தியில் இருப்பதாகவும், பெற்றோர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்ப வேண்டும் என்றும் பேருந்தில் இறந்து சாலையில் நின்றவாறு வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார்.
8ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த 3 குழந்தைகளின் தந்தை கைது
இது தொடர்பாக தண்டையார்பேட்டை பேருந்து முனைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது தொடர்பாக சிவசங்கர் காவல் துறையில் எந்த புகாரும் அளிக்கவில்லை. மேலும் தங்களிடமும் ஏதும் கூறவில்லை என கூறினர். நடத்துநர் பேசும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.