எங்ககிட்ட வச்சுக்கிட்டா பஸ் போகாது.. நடத்துனரை மிரட்டும் மாணவன்..!
சென்னை தாம்பரத்தில் இருந்து கண்டிகை வழியாக 31A, 31M, 31B ஆகிய தடங்களில் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் உள்ளன. காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து காலியாக இருந்தாலும் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை தட்டிக்கேட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை மாணவர்கள் மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்கள் அட்டகாசம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களை கேலி செய்வது, ஆசிரியர்களை அடிக்க செல்வது, வகுப்பறையில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை உடைத்துப் போடுவது என தொடர்ந்து அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், படிக்கட்டில் தொங்கிய படி வரும் பள்ளி மாணவர்களை எச்சரிக்கும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களை தாக்குவது மிரட்டிவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
படிக்கட்டில் பயணம்
இந்நிலையில், சென்னை தாம்பரத்தில் இருந்து கண்டிகை வழியாக 31A, 31M, 31B ஆகிய தடங்களில் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் உள்ளன. காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து காலியாக இருந்தாலும் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மிரட்டும் மாணவர்
இதனை தட்டிக்கேட்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மாணவர்கள் மிரட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், எங்ககிட்ட வச்சுக்கிட்டா, பஸ்சே போகாது என்று மிரட்டுகிறார். மற்றொரு மாணவர் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டு விட்டு ஓடும் பேருந்தில் இருந்து குறித்து ஓடுகிறார். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் தொடர்ந்து இடுபட்டு வருவதாக அரசு பேருந்து ஓட்டுநர் கவலை தெரிவித்துள்ளனர்.