Asianet News TamilAsianet News Tamil

பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..!

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

school education department announce extra time...sengottaiyan
Author
Tamil Nadu, First Published Oct 22, 2019, 4:43 PM IST

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

school education department announce extra time...sengottaiyan

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தற்போது 2.30 மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நேரம் போதுமானதாக இல்லையென மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

school education department announce extra time...sengottaiyan

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், புதிய பாடத்திட்டத்தால் தேர்வெழுத கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இதையடுத்து, பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இனி 3 மணி நேரம் எழுத அனுமதிக்கப்படுவர். இந்த நடைமுறை நடப்பாண்டிலேயே அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios