ஜீவஜோதி கணவனை கடத்திக் கொன்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணபவன்  ராஜகோபால் நேற்று இரவு 'பள்ஸ்' முழுவதுமாக இறங்கிய நிலையில் மருத்துவமனையில் வெண்ட்டிலெட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் அபாயகட்டத்தில் தான் உள்ளதால் அவரை காண அவரது உறவினர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்து வந்துகொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தனது மேனேஜர் மகளான ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வருகிறார். உச்சநீதிமன்ற உத்தரவு படி கடந்த 9 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜரானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றம் வந்தார். அதனைத் தொடர்ந்து  நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

இந்நிலையில், சிறைக்கு செல்லும் முன்பே ராஜகோபால் உடல்நிலை மோசமானதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு 11.00 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரின் உடல்நிலை மோசமானதாகவும், ஸ்டான்லி மருத்துவர்கள் தெரிவித்தன.

அதன் பிறகு வெண்ட்டிலேட்டர் இயந்திரம் மூலம் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் அண்ணாச்சி ராஜகோபாலில் உடல் நிலை மருத்துவ இயந்திரங்கள் உதவியுடன் இயங்கி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தன. இதன் காரணமாக சரவணபவன் முக்கிய ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் நேற்று இரவிலிருந்து மருத்துவமனைக்கு வரத்தொடங்கியுள்ளன. அதிகாலை 03.00 மணியளவில் ராஜகோபால் உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தன. ஆனாலும், வெண்டிட்லேட்டரின் உதவியால் மட்டுமே ராஜகோபாலன் உடல்நிலைசீராக உள்ளதாக சொல்கின்றனர்.