சாந்தன் உடல்நிலை கவலைக்கிடம்.. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

Santhan health Condition critical tvk

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: சிவகங்கை மற்றும் மதுரை.. எஸ்.பி-க்கள் அதிரடி இடமாற்றம் - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

தற்போது திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வந்த சாந்தன் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இந்நிலையில், கடந்த ஜனவரி 24ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையும் படிங்க:  சிறையில் இருந்து வெளியே வருவாரா செந்தில் பாலாஜி? இன்று காலை தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த  சாந்தன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இவரது உடல்நிலை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்: சாந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios