சிறையில் இருந்து வெளியே வருவாரா செந்தில் பாலாஜி? இன்று காலை தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பக்க உள்ளார்.
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவிற்கு துரோகம் செய்தால் செந்தில் பாலாஜி கதி தான்.. போற போக்கில் ஸ்டாலினை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
கைது செய்யப்பட்டபோது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரினார். சென்னை முதன்மை அமர்வு மன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி 20க்கும் மேற்பட்ட முறை மனுதாக்கல் செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 2வது முறையாக ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன என்றார். செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்க துறை தரப்பில் வாதிட்டப்பட்டது.
இதையும் படிங்க: 3 சதவீதம் வாக்கு வங்கி உள்ள பாஜகவில்.. நான் போய்! ஏங்க நீங்க வேற! எஸ்.பி.வேலுமணி கலகல பதில்!
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது.