'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமாகி, தற்போது நட்சத்திர தம்பதிகளாக வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்துள்ளவர்கள், இந்த சீரியலில் நாயகன் - நாயகியாக நடித்த ஆலியா மற்றும் சஞ்சீவ் தம்பதி.

ஆலியா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், டான்ஸிங் சூப்பர் ஸ்டார் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக மட்டும் இருந்தார். இந்த ஷோ கடந்த வாரம் முடிவடைந்த போது இவருக்கு விஜய் டிவி செட்டிலேயே வளையக்காப்பு செய்து ரணகளம் செய்து விட்டனர்.  சஞ்சீவ் 'காற்றின் மொழி' என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அவ்வப்போது தங்கள் இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சஞ்சீவ், தற்போது நடிகர் ரியோ ராஜ் மற்றும் அவருடைய மனைவி ஸ்ருதியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, ஒரே இயக்குனரிடம் ஹீரோவாக நடித்து, இப்போது ஒரே சமயத்தில் அப்பாவாக போகிறோம் என தெரிவித்துள்ளார். அதே போல் ஒரே ஹாஸ்பிட்டலில் பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர்களின் இந்த கியூட் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.