போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று மாலைக்குள் சம்பளம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். மாத இறுதியில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் ஊதியத்தை அளிக்வில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து இன்று காலை முதல், சென்னை வடபழனி, அண்ணாநகர், பெரம்பூர், பூந்தமல்லி, அம்பத்தூரில் மாநகர பஸ்களை பணிமனையில் இருந்து இயக்காமல் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிப்படைந்தனர்.

இதைதொடர்ந்து, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், குறைவான சம்பளம் வழங்குவதாக சிலர் வதந்தி பரப்புவதாகவும், அதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.