Tamil Nadu Silambam Association: தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன், அவரது மகன் மற்றும் பொருளாளர் மீது 25 லட்ச ரூபாய் கையாடல் புகார். ]
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெறாமலே அங்கீகாரம் பெற்றதாக தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் பெயரில் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன் என்பவர் போலியாக நடத்தி வருகிறார். போலியாக தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெறாமலே அங்கீகாரம் பெற்றதாக நடத்தி 25 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ச்சி என்ற பேரில் பணம் வசூல் செய்து பல மோசடிகளை நடத்தி வருவதாக இதுகுறித்து வழக்கறிஞர் ஜெயேந்திரன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு
டக்கழகத்தில் இணைச்செயலாளராக உள்ளேன். தமிழ்நாடு சிலம்பாட்டக்கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ராஜேந்திரன் (2010-2022). வாரிசு முறை கூடாது என்ற இந்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு விதியை மீறி (NCGGS-2017 Page-8) அவருக்குப் பின் தலைவராக்கப்பட்ட அவரது மகன் பிரதிப் ராஜே மற்றும் பொருளாளர்ரவிச்சந்திரன் ஆகியோர், பொதுக்குழு அனுமதி இன்றியும் சங்க விதிகளைப் பின்பற்றாமலும், தமிழ்நாடு சிலம்பாட்டக்கழகத்தின் பெயரில் புதிதாக சென்னை தி.நகர் ஐடிபிஐ வங்கிக்கிளையில் 01924102000018586 என்ற கணக்கை துவக்கி, என்று ஒவ்வொரு போட்டியாளரும் ஆண்டு தோறும் ரூ.100 செலுத்தவேண்டும் என்று வற்புறுத்தி பெறப்பட்ட தொகை மற்றும் இதர வரவுகளை இந்த புதிய கணக்கில் கொண்டுவந்து கடந்த 4 ஆண்டுகளில் மூவரும் ரூ. 25 லட்சத்துக்கு மேல் கையாடல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் பெயரில் போலி
மேலும் சங்கவிதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 09ம் தேதி No. 2321/COP/Visitors/2024 புகார் அளித்திருந்தேன். அந்த புகார் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் சங்க விதிகள், மாநில விளையாட்டு விதிகளை மதிக்காமல் மீறி வருவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர். மேற்படி நபர்கள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெறாமலேயே அங்கீகாரம் பெற்றதாக சொல்லிக்கொண்டு ஏப்ரல் 27 அதாவது நாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அந்தந்த மாவட்ட போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
எனவே இந்த புகாரை விசாரித்து மோசடி வேலைகளில் ஈடுபடும் முன்னாள் தலைவர் எம்.ராஜேந்திரன், அவரது மகன் பிரதீப் ராஜே மற்றும்பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
