கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வா தீனதயாளன்  மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பங்கேற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், 83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

Rs. 10 lakh for family of table tennis player killed in car accident.. CM Stalin Announcement

கார் விபத்தில் உயிரிழந்த இளம் டெபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியின் இருந்து 10 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சாலை விபத்து

தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வா தீனதயாளன்  மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பங்கேற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், 83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. 

Rs. 10 lakh for family of table tennis player killed in car accident.. CM Stalin Announcement

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வா தீனதயாளன் நோங்போ சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தீனதயாளனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த நிலையில் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

Rs. 10 lakh for family of table tennis player killed in car accident.. CM Stalin Announcement

நிவாரணம் நிதி

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கார் விபத்தில் உயிரிழந்த இளம் டெபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியின் இருந்து 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படம் என அறிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios