Asianet News TamilAsianet News Tamil

சென்னையை சுற்றிப்பார்க்க ரூ.10 போதும்... அசத்தல் திட்டம்..!

புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மக்கள் மத்தியில் சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பத்து ரூபாய் கட்டணத்தில் சென்னை நகரின் முக்கிய இடங்களை அழைத்துச் செல்லவுள்ளது.

Rs. 10 is enough to visit Chennai
Author
Tamil Nadu, First Published Dec 30, 2019, 2:57 PM IST

சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலா பொருட்காட்சி தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோவில், ஆறுபடை முருகன் கோவில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.Rs. 10 is enough to visit Chennai

காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த வாகனம் இயக்கப்படுகிறது. இதற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இது செல்லும். சுற்றுலாப் பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம். எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம் என சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

Rs. 10 is enough to visit Chennai

இது ஒருபுறமிருக்க மகாபலிபுரத்தில் பார்க்கிங் கட்டணம், நுழைவு கட்டணம் ஆகியவை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு மகாபலிபுரத்தில் நடைபெற்ற பின்னர் பொதுமக்கள் மத்தியில் அந்த இடங்களுக்குச் செல்ல ஆர்வம் அதிகரித்தது. ஆனால் முன்பைவிட தற்போது அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios