திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ.1.92 கோடி ரொக்கப் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாட்களாக ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்றது. இதையடுத்து கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த எண்ணிக்கையில் ரூ.1,92,81,847 ரொக்கமும், 405 கிராம் தங்கம், 10.813 கிராம் வெள்ளியும் ஆடி கிருத்திகை உற்சவத்தின்போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய விவரங்கள் தெரியவந்தது. இந்த பணம் நேற்று முன்தினம் மாலை வங்கியில் செலுத்தப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கோயில் பெட்டகத்தில் வைக்கப்பட்டன.