ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் வழக்கில் திடீர் திருப்பம்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன தகவல்!

Rowdy Thiruvengadam Encounter: பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். 

Rowdy Thiruvengadam Encounter Case! Tamil Nadu government information in the High Court tvk

கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் கொலை செய்த ஆயுதங்களை மாதவரத்தில் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். இதனையடுத்து ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக ரவுடி திருவேங்கடத்தை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து போலீசாரை தாக்க முயற்சித்ததாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டு என்கவுன்டர் செய்தனர். திருவேங்கடத்தின் வலது கை தோள்பட்டையிலும், நெஞ்சு பகுதியிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

இதையும் படிங்க: Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; காவல்துறை பகீர் தகவல்! அதிர்ந்த நீதிபதிகள்!

இதையடுத்து திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட பகுதியில் மாதவரம் மாஜிஸ்திரேட் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் திருவேங்கடம் என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என்கவுண்டர் செய்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். 

இதையும் படிங்க: மீண்டும் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கப்போகுதா? வானிலை மையம் சொல்வது என்ன? பரபரப்பு தகவல்!

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், எம்.சுதீர் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி என்கவுண்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை இன்னும் அரசுக்கு கிடைக்கவில்லை, விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் திருவேங்கடத்தின் மரணம் தொடர்பான வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் திருவேங்கடம் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios