Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஒரு துயர சம்பவம்.. இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு வலது கை அகற்றம்.. கொதிக்கும் இபிஎஸ்.!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்த பெண்ணிற்கு தவறான சிகிச்சை காரணமாக கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Right hand amputation of a woman who came for heart treatment... Edappadi Palanisamy condemned tvk
Author
First Published Sep 27, 2023, 3:12 PM IST

விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவமும் ஏற்படுத்திய காயமே இன்னும் ஆறும் முன்னர் மீண்டும் இது போன்ற ஒரு துயர சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்த பெண்ணிற்கு தவறான சிகிச்சை காரணமாக கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில்;- சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்த ஜோதி என்ற பெண்ணிற்கு முறையான  சிகிச்சை அளிக்காததன் காரணமாக கை அகற்றப்பட்டதாக செய்திகள் வருகின்றன. 

Right hand amputation of a woman who came for heart treatment... Edappadi Palanisamy condemned tvk

கடந்த ஆண்டு தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவமும் ஏற்படுத்திய காயமே இன்னும் ஆறும் முன்னர் மீண்டும் இது போன்ற ஒரு துயர சம்பவம் நடந்திருப்பது, அலட்சியமும் அக்கறையின்மைக்கும் உதாரணமாக இருக்கும் இந்த விடியா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றது என்பதற்கான பெரும் எடுத்துக்காட்டு.

Right hand amputation of a woman who came for heart treatment... Edappadi Palanisamy condemned tvk

மக்களை காக்கும் கடமையில் இருந்து இந்த அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதை வன்மையாக கண்டிப்பதுடன், அரசின் தவறான சிகிச்சையால் தனது கையை இழந்து தவிக்கும் திருமதி.ஜோதிக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்கவும், அவருக்கு தக்க இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என  எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios