தமிழகம் முழுவதும் காலியாக கிராம நிர்வாக அலுவலர்கள் காலிப்பணியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் குறிஞ்சிப்பாடி உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வை தமிழக தேர்வாணையம் நடத்துகிறது. காலிப்பணியிடங்களை மொத்தமாக நிரப்ப கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்கு மாற்று ஏற்பாடாக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை ஓராண்டுக்கு பணி நியமனம் செய்து அரசாரணை வெளியிடப்பட்டுள்ளது.

கிராம உதவி அலுவலர்களை தகுதிக்கேற்ப கிராம நிர்வாக அலுவலர்களாக நியமனம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது’’ என அவர் தெரிவித்தார்.