மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டருக்கு ரூ-100, மாநிய கியாஸ் சிலிண்டருக்கு ரூ.3.20 என குறைந்துள்ளது.

மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இம்முடிவை எடுத்துள்ளன. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

 

டெல்லியில், ரூ.737.50 ஆக இருந்த கியாஸ் விலை, ரூ.637 ஆக குறைந்தது. மானிய சமையல் கியாஸ் விலை, ரூ.497.37-ல் இருந்து ரூ.494.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த போராட்டம் தொடர்ந்து 12 நாட்கள் நீடித்தால், பொதுமக்கள் பாதிப்படைவார்கள். இதனால், பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.

மேலும், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோவா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவுவதற்கு முன், உரிய நடவடிக்கை எடுக்க அரசு தலையிட வேண்டும் என சமூக ஆர்வலகர்கள் வலியுறுத்துகின்றனர்.